14 November 2006

எலும்புத்துண்டு...

இலவசம்ங்கிற வார்த்தை எல்லா மனுசனுக்குள்ளும் ஒரு தற்காலிக இன்பத்தை தோற்றுவிக்கும்ங்கிறது உண்மைதானுங்க. அது தெரிஞ்சிதானுங்களே, எல்லாக் கம்பெனி காரனுவளும், ஒன்னு வாங்கு, ஒன்னு இலவசம்ங்குறானுங்க. நாமளும் மதி மயங்கி, பின்னாலயே போறோம்.

கம்பெனிகாரப் பயலுவ இலவசம் கொடுக்கறத விடுங்க. அவன் அவன் வியாபாரம் பெருகுறதுக்கு, என்னத்தையும் கொடுத்துட்டு போறான். நாமளும், மனசுக்கு பிடிப்பதுக்கு ஏத்தா மாதிரி, கையில இருக்குற காசுக்குத் தக்கன வாங்கிட்டு போறோம். லாபமோ, நட்டமோ நம்மளோட இருந்துட்டுப் போறது.

ஆனா, இதே வேலய, இப்ப அரசியல் வாதிங்களும் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. இலவச வேட்டி சேலை, இலவச மின்சாரம், இலவச சத்துணவு, இன்னும் என்னல்லாமோ?... அது சரி, இவங்க என்னா, மக்களுக்குச் சேவை பண்ணவா கட்சி நடத்துறாங்க, கட்சி கம்பெனிதானுங்களே நடத்துறாங்க..அப்படித்தான இருக்கும்.

இந்த மாதிரி இலவசம்லாம் கொஞ்சம் ஏத்துக்கிடலாம் போலத்தான் இருந்தது. ஏதோ பாமர மக்களுக்கு பயன் பட்டாச் சரின்னு பட்டது.

ஆனா, இப்ப நடந்து முடிஞ்ச தேர்தல்ல பாத்தா, ஒரே சிரிப்பாணியா ஆக்கிபுட்டாங்க. இலவச டிவியாம், இலவச நிலமாம், கம்யூட்டர் இலவசமாம்.. தாலிக்கு தங்கம் இலவசமாம்.. ஒரு ஒரு நாளும், இவன் என்னா இலவசம் கொடுப்பான்..அவன் என்னா இலவசம் கொடுப்பான்னு, தமிழன 'ஆ.' ன்னு வாய் பாக்க வச்சுட்டு, ரெண்டுல ஒன்னு ஆட்சிக்கு வந்தாச்சு.

ஒரு பக்கம் டி.வி இலவசம் கொடுத்திட்டு, இன்னொரு பக்கம் சன் டிவியை கட்டண டிவியாக்கியாச்சு. அவனுங்க எல்லாம் புத்திசாலிங்க. நமக்குத்தான் மொட்டையும், சந்தனமும்.

இந்த சன் டிவி ஆரம்பிக்கப்பட கட்சிப் பண டெபாசிட்டின் பேரில, கடன் வாங்கப்பட்டதாச் சொன்னாங்க. அந்தக் கட்சிப் பணம், உருட்டல்,மிரட்டலிலும், சில கட்சி விசுவாசிகளின் நிதியிலும் சேர்ந்தது. அது வளர்ந்து, எங்கேயோ போயி நிக்குது, நம்ம கையில ஒரு இலவச டிவி வரும்னு எதிர்பார்ப்பு. இந்த இலவச டிவி வேணும்னா, நூறு ரூபாய் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணனும்னு ஒரு கூட்டம் ஏமாத்தி பணம் பறிச்சுது. எரியிற வீட்டுல புடுங்கினது ஆதாயம்ங்கிற மாதிரி, இலவச ஆசையில இருக்குறவங்கிட்ட புடுங்கித்தின்னது ஒரு கூட்டம்.

இதெல்லாம் சரி, எத்தன பேருக்கு டிவி கொடுத்திருக்காக? எல்லாம் ஒழுங்கா தெரியுதா? கட்சிக்காரனா இருந்தாத்தான் டிவியா? இல்ல எல்லாருக்கும் கிடைக்குதா? அதெல்லாம், யாருக்கு கவலை. ஏட்டளவில திட்டத்த அமுலாக்கியாச்சு.


இந்தத் டிவியில, குடும்ப பத்திரிக்கை, நாளிதழ் எல்லாத்தையும் அப்பப்ப விளம்பரம் பண்ணி, அத வாங்க இலவசத்தக் கொடுத்து, அப்படியே ஒரு சுழல்ல போய்கிட்டு இருக்கு.

இந்த இலவச டிவி திட்டத்தால, மக்களுக்கு என்னங்க பயன்? தமிழகத்துல இருக்கற மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள்ள, 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்குதாம். எந்த அடிப்படையில இந்தத்திட்டமெல்லாம் அவன மேல கொண்டுவர உதவப் போகுது? யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க.

இன்னொரு பக்கம், தமிழ்-ல தலைப்பு வக்கிற திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி இலவசமாம். என்னே ஒரு மக்கள் வளர்ச்சித் திட்டங்கள்.

கூட இருக்கிற கட்சிகளாவது ஏதாவது உருப்படியா பண்ணக் கேக்குதா? எங்களுக்கு அரசு விளம்பரத்த கொடுங்க, நாங்களும் கஜானா காசுல கொஞ்சம் எங்க வூட்டுக்கு கொண்டு போறோம்ங்கிறாங்க.

குரைக்கிற நன்றியுடைய பிராணிக்கு எலும்புத்துண்டு மாதிரி, இந்த மாதிரியான இலவசத்திட்டங்கள்ல கண்துடைப்பு பண்ணிட்டுப் போயிடுறாங்க. இதப் பத்தியெல்லாம் யோசிக்காம, நம்ம வாலு, அடுத்து வர்ர எலும்புத்துண்டுக்கு ஆடிக்கிட்டு இருக்கு.


இத்தனை கால அரசியல் வாழ்க்கையில, இவங்க வாங்குன சம்பளத்துல எவ்வளவு சேத்து வச்சிருப்பாக தெரியுமா? குத்து மதிப்பா, செல்வன் ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க. புரியும்.

கருணாநிதி, ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ?


மக்களுக்குச் செலவழிக்க, எவ்வளவு பணம் ஒதுக்கப்படுது, எவ்வளவு செலவு பண்ணுறாங்கன்னு, தெரிய ஹரிகரனோட இந்தப் பதிவ படிங்க.

தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்

இவ்வளவு காசு பணம் சேக்கிற அரசியல்வாதிங்க எல்லாம், சொந்தக் காசுல வேணாம்யா, அடிக்கிற காசுல ஏதாவது பொது ஜனத்துக்குப் பயன்படுற மாதிரி இலவச மருத்துவ மனைகளோ, இலவச பள்ளிச் சாலைகளோ திறந்து மக்களுக்கு உதவுறாங்களா சொல்லுங்க.


ஒன்னு நிசமுங்க... ஏமாறுகிற மக்கள் நினைப்புல வச்சுக்கணும்.. 'வாக்குறுதிகள் இலவசம்.. வாக்குகள் அதன் விலை'ங்குறது தான் அது.

ம்....என்னத்த நான் சொல்லுறது... ஏதோ டிவியில 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ன்னு' ஏதோ சொல்றாக.. என்ன படம்னு கேட்டுட்டு வாரேன்..மிச்சத்த அப்புறமா பேசலாம்..

03 November 2006

முதல்ல மனுசங்களா இருங்கப்பா

இன்னைக்கு வலையில செய்திகளை படிச்சுகிட்டு இருந்தப்ப, 'தமிழ்செய்தி'யின் வலைப்பதிவு கண்ணில் பட்டது.

Image and video hosting by TinyPic
தலித்துகள் கோவிலில் நுழைய அனுமதி மறுத்திருக்கிறார்கள். ஒரிசாவிலுள்ள கேந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலில்தான் இந்த அட்டூழியம். இது இன்னைக்கி நேத்தைக்கிலிருந்து அல்ல, கடந்த 400 வருடங்களாக இப்படி இருக்கிறதாம்.

கடந்த வருடம், நாலு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அவமதிக்கப் பட்டதோடு, அபராதம் வேறு வசூலிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் வாங்கியும் கூட இந்த நிலை மாறவில்லையென்றால், கேவலம்.

தலித்துகள் கோவிலில் சாமி பார்க்கணும்னா, வெளிப்பிரகாரத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் பார்க்கணுமாம்.

மனுசன மனுசனா பாருங்கப்பா. எந்தக் கடவுளும் இவந்தான் என்னப் பார்க்கலாம்..அவன் என்னப் பார்க்கக் கூடாதுன்னு சட்டம் போடலை.

இந்த மாதிரி மக்களுக்கு புத்தியில படணும்னுதான் நந்தனார் கதை கூட சொல்லப்பட்டது. வேட்டுவன் குகனுடன், புனித ராமரின் நட்பு பாராட்டப் பட்டது.

ஆதிக்க வெறியர்கள், கடவுளின் மேல பழியைப் போட்டு, அடக்கி ஆள நினைத்ததன் விளைவுதான் இந்தமாதிரியான பழக்கமெல்லாம்.

மனுசனுக்காகத்தான் கடவுள். கடவுளுக்காக மனுசன் இல்லை. இத எப்பதான் மடமைக்கூட்டம் உணரப் போகுதோ?

ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க. 'தலித்துகளின் தலைவர்கள்' என குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிதாமகர்களுக்கு, இதெல்லாம் கண்ணில் பட வில்லையா? தலித்துகளுக்கென ஒரு தனி மந்திரி வேறு. சுதந்திரம் அடைஞ்சதிலேயிருந்து எத்தனை கட்சிகள் ஆண்டு போயிருக்கும். தலித்துகளுக்காக எத்தனை மந்திரிகள் வந்து போயிருப்பாக. எந்த ஒரு அரசியல்வாதி கண்ணுக்கும் இந்த அவலம் படலையா? இல்லை, பட்டும் காணாம விட்டுட்டாங்களா? இல்லை அதிகார வர்க்கத்துக்கு விலை போயிட்டாங்களா?

மொத்த மக்கள் தொகையில் 50 சதத்திற்கு இணையாக இருக்கக் கூடிய கேரடா கார்-க் கில நவம்பர் 19-ஆம் தேதி, தலித்துகள் அத்து மீறி கோயிலுக்குள் நுழையப் போறாங்க. அதுக்குள்ள, அதிகாரிகள் தலையிட்டு, சரியான முடிவு எடுக்கலைன்னா, நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம்.

இப்பதான் மாநில அரசு முழிச்சிகிட்டு, 'விரைவில் தீர்வு காண்போம்னு', மாநில தலித்து மந்திரி மூலமாச் சொல்லியிருக்கு.

ம்..ம்.. 'மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே..இது மாறுவதப்போ தீருவதப்போ நம்ம கவல'..

02 November 2006

சூப்பர் பல்ட்டியா? குட்டி கரணமா?

இன்னைக்கிச் செய்தியெல்லாம் படிச்சிருப்பீங்க. பச்சைத் துரோகம்லாம் வெளுத்துப் போச்சு போல.

'சேம் சைடு கோல் போட்டதெல்லாம் மறந்துடுங்க. மீண்டும் கிளர வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டாங்க'

'என்னாத்துக்கு வெளிய போய் சத்தம் போட்டுகிட்டு. உள்ளார வந்து பேசி செட் பண்ணிக்கலாம். எதுக்கு எல்லா குட்டையும் வெளிய விடணும்னு' டீல் போட்டுருப்பாக. தமிழ் வழி தூது விட்டாச்சு.

ஒரு நாள்ல எல்லாக் கோபமும், துரோகமும் மறையுதுன்னா இரண்டு தலைவர்களுக்கும் பெரிய மனசுதாங்க.

ரொம்ப ஆர்வமா அடுத்த சீனைப் பார்க்கலாம்னா, 'சப்'னு ஆக்கிட்டாங்களே. கலைஞரே இப்படி பணிஞ்சு போனார்னா, பின்னாடி எப்படி இருக்குமோ?

அப்புறம் குறுநில மன்னர்கள் போல,சாதிக்கொரு கட்சி ஆரம்பிச்சு நிறைய தலவருங்க வரப்போறாருங்க.

ம்..ம்.. .இது சூப்பர் பல்ட்டியா? இல்ல குட்டி கரணமா? தெரியல. டீல் ஒத்து வரலைன்னா, வெளுத்தச் சாயத்துக்கு கலர் கொடுக்க வேண்டியதுதான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :)

31 October 2006

கலர்ப்படம் காட்டுறாங்கப்பா..

நடந்து முடிந்தது ஒரு உள்ளாட்சித் தேர்தல்.

ஆரம்பத்திலேயே, அதிரடி கலவர ஆக்சன்ல தொடங்கின படம், அப்புறம் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செஞ்சுட்டார்னு ஒரு 'ட்விஸ்ட்' ஏற்படுத்தி திமுக - பாமக உற்சாகப் பட்டு கிடக்க, 'குடிகாரன் -லாம் எம்ஜிஆர் பத்தி பேசுவதான்னு' கேக்க, 'ஊத்திக் கொடுத்தாரா'ன்னு பதிலடி கொடுக்க ஓரே உற்சாகமா போய்கிட்டு இருக்க, திடுதிப்-னுட்டு சொந்த கேங்-லேயே 'பச்சைத் துரோகம்னுட்டு' எதிர்பாராத டர்னிங்க்-ல வந்து இண்டர்வெல் உட்டுருக்காங்க. இனி எப்படி போகுமோ? த்ரில் தாங்க.

எதிர்பாராம வந்த தடங்கல எப்படியும் ஹீரோ சமாளிச்சுருவாருன்னுதான் தோணுது. அடுத்து பஸ்கட்டண உயர்வு..மின் கட்டண உயர்வு அந்த உயர்வு..இந்த உயர்வுன்னுட்டெல்லாம் மக்களுக்கு ரெடி பண்ணனுமே..


பதவி தாரேன்னு வாக்குறுதி கொடுத்திட்டு தரலே. ஜெயிக்க வைக்கிறேன்னுட்டு, தோற்க வச்சுட்டாங்க, பச்சைத் துரோகம் அது இதுன்னு எல்லாம் பேசறாங்களே, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்தாம, ஏமாத்தறத என்ன கலர் துரோகம்னுங்க சொல்றது?

ம்..ம்..இதெல்லாம் எங்க யோசிக்க? யாரு யோசிக்க. அடுத்து இவரு அங்க போவாரா? இல்ல அவரு ஏதாவது கொடுத்து இவர சமாளிப்பாரா? இதப் பத்தி பேசி, ரெண்டு டீ-யக் குடிச்சிட்டு இடத்தக் காலி பண்ணுவோம்.

சண்டைப் படம்னா மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். வலைப்பதிவு எழுதறது நமக்கும் அவல் கிடைக்குது. கொரிச்சுட்டு விறுவிறுப்பா படம் பாக்க வேண்டியதுதான். ம்ம்...



மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். பார்க்கலாம், இடைவேளைக்கு அப்புறம் எப்படி போகுதுன்னு..

29 October 2006

மக்களே தலையில் பூசிக்கொள்ள சந்தனம்..இலவசம்

என்னாது..தலையில பூசிக்க சந்தனமா? எங்க குடுக்கறா? யாரு குடுக்கறா? ஆர்வமா இருக்கா?

வேற யாரு குடுப்பா? எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கதான் நம்ம தலைக்கு மொளகாய் அரைக்கிறதுக்கு பதிலா சந்தனம் தேய்க்கிறாங்க. மொளகா அரச்சா எரியும், சந்தனம் பூசினா குளிர்ச்சியா இருக்கும்ல.

என்னா, ஏதுன்னு புரியணும்னா
இங்க போய் படிங்க

தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்


அரசாங்கம் ஒதுக்கிற நிதி எவ்வளவு, அத எப்படி செலவு பண்றாங்கன்னெல்லாம் யோசிங்கய்யா?

நம்ம மக்கள்-ல, பெரும்பாலானவங்களுக்கு அவங்க அவங்க பொளப்ப பாக்கவே நேரம் பத்தாது. இதுல போயி, இத எங்க பார்த்து எவனப் போயி கேள்வி கேக்கப் போறான்?

படிச்சவங்க, நாலு எழுத்து அறிஞ்சவங்க, சமூக மனப்பான்மை உள்ளவங்க எல்லாம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதுமாதிரியான விசயங்கள கேள்வி கேட்கத் தொடங்கனும், அலசி ஆராயணும். நம்மாள தனிக்கட்சி ஆரம்பிச்சி, முழு நேரமும் செலவிட முடியாதுதான். ஆனா, கொஞ்சம் சமூகப் பொறுப்போடு, நடந்து இம்மாதிரியான விசயங்களைத் தட்டிக் கேட்க முன்வந்தா, மக்களுக்கான குறைந்த பட்சம் அடிப்படை வசதிகளாவது பெருகாதா?

திட்டித் திட்டித்தான் நம்ம அரசியல்வாதிங்க பொளப்பு நடத்தறானுங்க. இவன் அவனத் திட்டறான். அவன் இவனத் திட்டறான். காணாக் குறைக்கு, மக்களுக்குள்ளே வேற, அவன் உசந்த சாதிக்காரன், இவன் தாழ்ந்த சாதிக்காரன், அவன் அந்த மதம், இவன் இந்த மதம்னு வேற பிரிச்சு உட்றானுங்க. எவனாவது முழுச்சி கேள்வி கேட்டான்னா, அவன் அந்த சாதிக்காரன் இல்ல, அந்த மதம்னு அதனாலதான் அப்படி பேசறான்னு சொல்லிட வேண்டியது. பிரிச்சு, திசை திருப்பறதுக்கு ஆயிரம் விசயம் இருக்கு நம்ம கிட்ட. அத நம்பி அரசியல்வாதி பொழக்கிறான், ஜனங்க நாம பொழம்புறோம்.

ஏதோ உங்களால முடிஞ்சதச் செய்யுங்கய்யா, உங்க வம்சத்துக்கும் புண்ணியமாப் போகும்.





28 October 2006

தருமி: 184. BLOGGERS' MEET AT MADURAI - 4

தருமி: 184. BLOGGERS' MEET AT MADURAI - 4

வலைஞர் கூட்டம் - சில எதிர்பார்ப்புகள்

ப்ளாக் அறிமுகமானாலும் ஆச்சு, எல்லாருக்கும் எழுதற ஆச பத்திக்கிச்சு. எழுதி எழுதி சுகங்கண்டவங்களுக்கு இடையே நட்பு பூக்க அடுத்த கட்ட ஆசயா, வலைஞர் கூட்டம் போட ஆச வந்துடுச்சு. ஊருக்கு ஊர் ஓரே வலைஞர் கூட்டம் கூட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

சமீபத்தில நடந்த மதுரை மாநாடு குறித்த தருமி அவர்கள் பதிவினைப் படிச்சேன். முடிவில ஒரு கேள்வி கேட்டிருந்தாரு.

"உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?"

யோசிக்க வச்ச அவரோட இந்தக் கேள்விக்காக, ஒரு பாராட்டு.

பொதுவா இந்த வலைப்பதிவர் மாநாடு பார்த்தா, போண்டா,டீ, பரோட்டா பரிமாறல் பத்தின விசயங்களா இருக்கும்னுட்டு நினைச்சுகிட்டே, இதயும் படிச்சேன். ஆனா, தருமி அய்யா சூப்பரா எல்லா வலைப்பதிவர்களும் யோசிக்கற மாதிரி இந்தக் கேள்விய வச்சிருக்காரு.


'பேனா முனை வாள்முனையை விடக் கூர்மையானது'ன்னு சொன்னது அந்தக் காலம். இப்ப 'வலைமுனை வாள்முனையைவிடக் கூர்மையானது'ன்னு சொல்லலாம்.

கண்டிப்பா இந்த பதிவுகளால மிகமிக நல்ல காரியங்கள் செய்யலாம், செய்ய முடியும்ங்கறது என் எண்ணம்.

பத்திரிக்கைகளும், மற்ற சில அரசியல்வாதிங்களும் இருட்டடிப்புச் செய்கிற விசயங்களைக் கூட வலையில் பதிப்பித்து உண்மை அலச முடியும். ஆனா, என்ன அதுக்கு நமக்கு கொஞ்சம் தைரியம் வேணும். பத்திரிக்கை, மற்ற பிற பலமான சக்திகளையே மிரட்டுகிற ஆட்கள் நம்ம அரசியல்வாதிகள். நாமெங்க இதில..ன்னுட்டு பயப்படுகிற வலைஞர்கள்தான் அதிகமிருக்கிறதால, அந்த அளவிற்கு இதில சாதிக்க முடியுமான்னு தெரியல.

ஆனா, வரக்கூடிய இளைய சமுதாயம் கண்டிப்பாக இதை மாற்றும்ஙகிற எண்ணம் எனக்கு இருக்கு.


தருமி அய்யா உட்பட, இனியும் கூட்ட இருக்கின்ற, கூட்டுகின்ற வலைஞர் மாநாடு அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அந்தந்த வட்டம்/மாவட்டங்களில் உங்கள் எம்.எல்.ஏ / எம்.பி க்கள் தொகுதிக்குச் செய்கின்ற / செய்த நல்ல காரியங்கள் அல்லது கிடப்பில் போட்ட - காற்றில் பரக்கவிட்ட வாக்குறுதிகளைச் சொல்லவும் ஒரு தளமாகவும் இந்த ப்ளாக்குகளைச் செய்யச் சொல்லுங்கள்.

நல்ல காரியங்கள் செய்கின்ற எம்.பி/எம்.எல்.ஏ க்களுக்கு அது உற்சாகமாய் இருக்கட்டும். செய்யாதவர்களை செய்யத் தூண்டும் விதமாக இருக்கட்டும்.

கூட்டப் படுகின்ற வலைஞர் கூட்டங்கள், இந்த நற்சிந்தனையையும் வலைஞரிடையே வைக்குமானால், அதுவும் இந்த ப்ளாக்குலகம் இந்தச் சமுதாயத்திற்கு செய்கின்ற ஒரு நன்மையே..

விஜயகாந்தின் வெற்றி அதிர்ச்சி!!!

விஜயகாந்தின் வெற்றி இரண்டு கட்சிகளுக்கும் அதிர்ச்சிதான். வெளிப்பட கருணாநிதி பாராட்டினாலும், உள்ளூர கட்சி பார்ட்டிகளை உஷார் பண்ணியிருப்பார். வாக்கு கணக்கு காட்டி மக்களைத் திசை திருப்புவதில் வல்லவர் அவர்.இப்ப விஜயகாந்த் அதிமுக வாக்குகளைத்தான் பிரித்திருக்கிறார் என்று சொல்லி, அதிமுக பக்கம் திருப்பியிருக்கிறார். டென்சன் அம்மாவும், உடனே திட்டி தீர்த்துவிட்டார்.

கேப்டனின் பேட்டி தெளிவாகவே இருக்கிறது.
படிக்க

திமுக-அதிமுக இரண்டின் பேரிலும் மக்களுக்கு பொதுஜன மக்களுக்கு வெறுப்புதான். ஆனாலும் என்ன செய்ய..பழந்தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிங்கள எதிர்க்க ஆளில்லையே?

விஜயகாந்தின் வெற்றி இரண்டு கட்சிகளுக்கும் அதிர்ச்சிதான். வெளிப்பட கருணாநிதி பாராட்டினாலும், உள்ளூர கட்சி பார்டிகளை உஷார் பண்ணியிருப்பார். வாக்கு கணக்கு காட்டி மக்களைத் திசை திருப்புவதில் வல்லவர் அவர்.இப்ப விஜயகாந்த் அதிமுக வாக்குகளைத்தான் பிரித்திருக்கிறார் என்று சொல்லி, அதிமுக பக்கம் திருப்பியிருக்கிறார். டென்சன் அம்மாவும், உடனே திட்டி தீர்த்துவிட்டார். கேப்டனின் பேட்டி தெளிவாகவே இருக்கிறது.

விஜயகாந்த் அந்த வகையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அது ஜொலிக்கனும், அதுக்கு மத்ததுங்க விடணுமே?

27 October 2006

எப்படி?

எப்படி?


சோத்துக்கட்சி ஆரம்பிச்சாச்சி. எப்படி இத நடத்துறது? என்னல்லாம் இதுல எழுதப்போறீங்கன்னு..அதுக்குள்ள உறுப்பினர் அட்டையோட வந்து நிக்கற ஒரு சகோதரர் கேக்கறார்?

'வர்ரப்பவே கேள்வி கேட்டுக்கிட்டு வர்ரான....இவனச் சேக்கலாமா? பின்னாடி பவர் சேந்த உடன பிரிச்சிகிட்டு ஓடிருவானோ?'ன்னு ஒரு எண்ணம் மனசுல வந்தது. 'அடச்சீ....கட்சின்னு ஆரம்பிச்சவே மனசுல எல்லா அரசியலும் வர ஆரம்பிச்சிடுச்சேன்னு'...வந்த சிந்தனையை தள்ளிட்டு 'நானே..இப்பத்தான் கடையை திறந்திருக்கேன்..நீ அதுக்குள்ள பெரிய கேள்விலாம் கேக்கறீயப்பா.. எப்படியாவது நடத்தலாம்ப்பா.. பொதுஜனம் எப்பவும் நல்லதுதான் நினைக்கும்..நாமும் நல்லது நினைக்கிற வரை..எல்லாம் நல்லபடியா போகும்ப்பா. .நீ வந்து கட்சியிலசேருப்பா..' ன்னு சொல்லி உறுப்பினர் அட்டையை கொடுத்தேன்.

அடையாள அட்டையை வாங்குன சகோதரர், 'யாராவது கட்சியோட கொள்கை என்னான்னா, என்ன சொல்ல...'

'நல்லா கேள்வி கேட்ட போ. சோத்துக்கட்சிக்கு கீழே என்ன எழுதியிருக்கு பாரு...அதான் நம்ம கொள்கை' ன்னேன்.

எப்படிங்க...ஓகே வா?

எதற்கு?


எதற்கு ப்ளாக்கர்?

தேன்கூட்டில ஓட்டு போடறதுக்கு மட்டும்தானா ப்ளாக்கர்? எப்பவாச்சும் சில சம்யந்தான் நல்ல தலைப்பு கொடுத்து, நல்ல கதை வருது. சிலபேரு கதைன்னுட்டு அரட்டைக் கச்சேரி பண்ணியிருப்பாங்க. அதுல போயி ஓட்டு போட, யாராவது ப்ளாக் ஆரம்பிப்பாங்களா?

உங்க மனசு கேக்கற கேள்வி சரிதான்...

அதுக்கு மட்டுமில்லங்கண்ணா.. இப்பல்லாம், தமிழ்மணமும், தேன்கூடும் படிக்க அவ்வளவு சுவராஸ்யமா இல்லங்கண்ணா? எல்லாவிதப்பட்ட அரசியல் கட்சிங்களுக்கும் இலவசமா கொள்கை பரப்பு செயலாளர்களா நிறைய மக்கள் எழுதிகிட்டு இருக்காங்கண்ணா..

நம்ம திருவாளர் பொது ஜனம் சார்பா பேச..எழுத ஆளு கம்மியாயிடுச்சி.. அவரும் என்ன மாதிரி ''பே..பே..' ன்னு முழிச்சிகிட்டு இருக்காரு. அதான்..அந்த முழி முழிச்சுகிட்டு யோசிக்கிறத அப்படியே எழுதத்தான் இந்த ப்ளாக்.

சோத்துக்கட்சி கூட்டாளிங்க எல்லாம் ஒன்னா சேரவாங்கப்பா...

ஏன்?

ஏன் ப்ளாக்கர்?

ரொம்ப நாளா இந்த தமிழ்மணம்,தேன்கூடு எல்லாம் படிச்சுட்டு இருக்கேன். இந்தவாட்டி தேன்கூடு கதைக்கு தேன்கூட்டில ஓட்டு போடலாம்னு போனா, என்னென்ன கேள்விலாமோ கேட்டாங்க. போற போக்கப் பாத்தா, அடுத்த ஓட்டுக்கு, ப்ளாக்கர் இருந்தா தான் ஓட்டு போடாலாம்னு சொல்லிடுவாங்களோன்னுட்டு இப்பவே ஆரம்பிச்சிட்டேன்.

சரிதானுங்களே?