03 November 2006

முதல்ல மனுசங்களா இருங்கப்பா

இன்னைக்கு வலையில செய்திகளை படிச்சுகிட்டு இருந்தப்ப, 'தமிழ்செய்தி'யின் வலைப்பதிவு கண்ணில் பட்டது.

Image and video hosting by TinyPic
தலித்துகள் கோவிலில் நுழைய அனுமதி மறுத்திருக்கிறார்கள். ஒரிசாவிலுள்ள கேந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலில்தான் இந்த அட்டூழியம். இது இன்னைக்கி நேத்தைக்கிலிருந்து அல்ல, கடந்த 400 வருடங்களாக இப்படி இருக்கிறதாம்.

கடந்த வருடம், நாலு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அவமதிக்கப் பட்டதோடு, அபராதம் வேறு வசூலிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் வாங்கியும் கூட இந்த நிலை மாறவில்லையென்றால், கேவலம்.

தலித்துகள் கோவிலில் சாமி பார்க்கணும்னா, வெளிப்பிரகாரத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் பார்க்கணுமாம்.

மனுசன மனுசனா பாருங்கப்பா. எந்தக் கடவுளும் இவந்தான் என்னப் பார்க்கலாம்..அவன் என்னப் பார்க்கக் கூடாதுன்னு சட்டம் போடலை.

இந்த மாதிரி மக்களுக்கு புத்தியில படணும்னுதான் நந்தனார் கதை கூட சொல்லப்பட்டது. வேட்டுவன் குகனுடன், புனித ராமரின் நட்பு பாராட்டப் பட்டது.

ஆதிக்க வெறியர்கள், கடவுளின் மேல பழியைப் போட்டு, அடக்கி ஆள நினைத்ததன் விளைவுதான் இந்தமாதிரியான பழக்கமெல்லாம்.

மனுசனுக்காகத்தான் கடவுள். கடவுளுக்காக மனுசன் இல்லை. இத எப்பதான் மடமைக்கூட்டம் உணரப் போகுதோ?

ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க. 'தலித்துகளின் தலைவர்கள்' என குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிதாமகர்களுக்கு, இதெல்லாம் கண்ணில் பட வில்லையா? தலித்துகளுக்கென ஒரு தனி மந்திரி வேறு. சுதந்திரம் அடைஞ்சதிலேயிருந்து எத்தனை கட்சிகள் ஆண்டு போயிருக்கும். தலித்துகளுக்காக எத்தனை மந்திரிகள் வந்து போயிருப்பாக. எந்த ஒரு அரசியல்வாதி கண்ணுக்கும் இந்த அவலம் படலையா? இல்லை, பட்டும் காணாம விட்டுட்டாங்களா? இல்லை அதிகார வர்க்கத்துக்கு விலை போயிட்டாங்களா?

மொத்த மக்கள் தொகையில் 50 சதத்திற்கு இணையாக இருக்கக் கூடிய கேரடா கார்-க் கில நவம்பர் 19-ஆம் தேதி, தலித்துகள் அத்து மீறி கோயிலுக்குள் நுழையப் போறாங்க. அதுக்குள்ள, அதிகாரிகள் தலையிட்டு, சரியான முடிவு எடுக்கலைன்னா, நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம்.

இப்பதான் மாநில அரசு முழிச்சிகிட்டு, 'விரைவில் தீர்வு காண்போம்னு', மாநில தலித்து மந்திரி மூலமாச் சொல்லியிருக்கு.

ம்..ம்.. 'மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே..இது மாறுவதப்போ தீருவதப்போ நம்ம கவல'..

02 November 2006

சூப்பர் பல்ட்டியா? குட்டி கரணமா?

இன்னைக்கிச் செய்தியெல்லாம் படிச்சிருப்பீங்க. பச்சைத் துரோகம்லாம் வெளுத்துப் போச்சு போல.

'சேம் சைடு கோல் போட்டதெல்லாம் மறந்துடுங்க. மீண்டும் கிளர வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டாங்க'

'என்னாத்துக்கு வெளிய போய் சத்தம் போட்டுகிட்டு. உள்ளார வந்து பேசி செட் பண்ணிக்கலாம். எதுக்கு எல்லா குட்டையும் வெளிய விடணும்னு' டீல் போட்டுருப்பாக. தமிழ் வழி தூது விட்டாச்சு.

ஒரு நாள்ல எல்லாக் கோபமும், துரோகமும் மறையுதுன்னா இரண்டு தலைவர்களுக்கும் பெரிய மனசுதாங்க.

ரொம்ப ஆர்வமா அடுத்த சீனைப் பார்க்கலாம்னா, 'சப்'னு ஆக்கிட்டாங்களே. கலைஞரே இப்படி பணிஞ்சு போனார்னா, பின்னாடி எப்படி இருக்குமோ?

அப்புறம் குறுநில மன்னர்கள் போல,சாதிக்கொரு கட்சி ஆரம்பிச்சு நிறைய தலவருங்க வரப்போறாருங்க.

ம்..ம்.. .இது சூப்பர் பல்ட்டியா? இல்ல குட்டி கரணமா? தெரியல. டீல் ஒத்து வரலைன்னா, வெளுத்தச் சாயத்துக்கு கலர் கொடுக்க வேண்டியதுதான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :)

31 October 2006

கலர்ப்படம் காட்டுறாங்கப்பா..

நடந்து முடிந்தது ஒரு உள்ளாட்சித் தேர்தல்.

ஆரம்பத்திலேயே, அதிரடி கலவர ஆக்சன்ல தொடங்கின படம், அப்புறம் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செஞ்சுட்டார்னு ஒரு 'ட்விஸ்ட்' ஏற்படுத்தி திமுக - பாமக உற்சாகப் பட்டு கிடக்க, 'குடிகாரன் -லாம் எம்ஜிஆர் பத்தி பேசுவதான்னு' கேக்க, 'ஊத்திக் கொடுத்தாரா'ன்னு பதிலடி கொடுக்க ஓரே உற்சாகமா போய்கிட்டு இருக்க, திடுதிப்-னுட்டு சொந்த கேங்-லேயே 'பச்சைத் துரோகம்னுட்டு' எதிர்பாராத டர்னிங்க்-ல வந்து இண்டர்வெல் உட்டுருக்காங்க. இனி எப்படி போகுமோ? த்ரில் தாங்க.

எதிர்பாராம வந்த தடங்கல எப்படியும் ஹீரோ சமாளிச்சுருவாருன்னுதான் தோணுது. அடுத்து பஸ்கட்டண உயர்வு..மின் கட்டண உயர்வு அந்த உயர்வு..இந்த உயர்வுன்னுட்டெல்லாம் மக்களுக்கு ரெடி பண்ணனுமே..


பதவி தாரேன்னு வாக்குறுதி கொடுத்திட்டு தரலே. ஜெயிக்க வைக்கிறேன்னுட்டு, தோற்க வச்சுட்டாங்க, பச்சைத் துரோகம் அது இதுன்னு எல்லாம் பேசறாங்களே, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்தாம, ஏமாத்தறத என்ன கலர் துரோகம்னுங்க சொல்றது?

ம்..ம்..இதெல்லாம் எங்க யோசிக்க? யாரு யோசிக்க. அடுத்து இவரு அங்க போவாரா? இல்ல அவரு ஏதாவது கொடுத்து இவர சமாளிப்பாரா? இதப் பத்தி பேசி, ரெண்டு டீ-யக் குடிச்சிட்டு இடத்தக் காலி பண்ணுவோம்.

சண்டைப் படம்னா மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். வலைப்பதிவு எழுதறது நமக்கும் அவல் கிடைக்குது. கொரிச்சுட்டு விறுவிறுப்பா படம் பாக்க வேண்டியதுதான். ம்ம்...



மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். பார்க்கலாம், இடைவேளைக்கு அப்புறம் எப்படி போகுதுன்னு..

29 October 2006

மக்களே தலையில் பூசிக்கொள்ள சந்தனம்..இலவசம்

என்னாது..தலையில பூசிக்க சந்தனமா? எங்க குடுக்கறா? யாரு குடுக்கறா? ஆர்வமா இருக்கா?

வேற யாரு குடுப்பா? எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கதான் நம்ம தலைக்கு மொளகாய் அரைக்கிறதுக்கு பதிலா சந்தனம் தேய்க்கிறாங்க. மொளகா அரச்சா எரியும், சந்தனம் பூசினா குளிர்ச்சியா இருக்கும்ல.

என்னா, ஏதுன்னு புரியணும்னா
இங்க போய் படிங்க

தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்


அரசாங்கம் ஒதுக்கிற நிதி எவ்வளவு, அத எப்படி செலவு பண்றாங்கன்னெல்லாம் யோசிங்கய்யா?

நம்ம மக்கள்-ல, பெரும்பாலானவங்களுக்கு அவங்க அவங்க பொளப்ப பாக்கவே நேரம் பத்தாது. இதுல போயி, இத எங்க பார்த்து எவனப் போயி கேள்வி கேக்கப் போறான்?

படிச்சவங்க, நாலு எழுத்து அறிஞ்சவங்க, சமூக மனப்பான்மை உள்ளவங்க எல்லாம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதுமாதிரியான விசயங்கள கேள்வி கேட்கத் தொடங்கனும், அலசி ஆராயணும். நம்மாள தனிக்கட்சி ஆரம்பிச்சி, முழு நேரமும் செலவிட முடியாதுதான். ஆனா, கொஞ்சம் சமூகப் பொறுப்போடு, நடந்து இம்மாதிரியான விசயங்களைத் தட்டிக் கேட்க முன்வந்தா, மக்களுக்கான குறைந்த பட்சம் அடிப்படை வசதிகளாவது பெருகாதா?

திட்டித் திட்டித்தான் நம்ம அரசியல்வாதிங்க பொளப்பு நடத்தறானுங்க. இவன் அவனத் திட்டறான். அவன் இவனத் திட்டறான். காணாக் குறைக்கு, மக்களுக்குள்ளே வேற, அவன் உசந்த சாதிக்காரன், இவன் தாழ்ந்த சாதிக்காரன், அவன் அந்த மதம், இவன் இந்த மதம்னு வேற பிரிச்சு உட்றானுங்க. எவனாவது முழுச்சி கேள்வி கேட்டான்னா, அவன் அந்த சாதிக்காரன் இல்ல, அந்த மதம்னு அதனாலதான் அப்படி பேசறான்னு சொல்லிட வேண்டியது. பிரிச்சு, திசை திருப்பறதுக்கு ஆயிரம் விசயம் இருக்கு நம்ம கிட்ட. அத நம்பி அரசியல்வாதி பொழக்கிறான், ஜனங்க நாம பொழம்புறோம்.

ஏதோ உங்களால முடிஞ்சதச் செய்யுங்கய்யா, உங்க வம்சத்துக்கும் புண்ணியமாப் போகும்.