28 October 2006

வலைஞர் கூட்டம் - சில எதிர்பார்ப்புகள்

ப்ளாக் அறிமுகமானாலும் ஆச்சு, எல்லாருக்கும் எழுதற ஆச பத்திக்கிச்சு. எழுதி எழுதி சுகங்கண்டவங்களுக்கு இடையே நட்பு பூக்க அடுத்த கட்ட ஆசயா, வலைஞர் கூட்டம் போட ஆச வந்துடுச்சு. ஊருக்கு ஊர் ஓரே வலைஞர் கூட்டம் கூட்ட ஆரம்பிச்சிட்டாங்க.

சமீபத்தில நடந்த மதுரை மாநாடு குறித்த தருமி அவர்கள் பதிவினைப் படிச்சேன். முடிவில ஒரு கேள்வி கேட்டிருந்தாரு.

"உங்கள் கருத்தறிய இப்போது பொதுவில் வைக்கிறேன்: நம் பதிவுலகத்தால், இங்கு நிலவி வரும் கருத்துக் குவியல்களால் நம் சமூகத்திற்கு ஏதாவது நேரடி பயன் கிட்டுமா? என்றாவது?"

யோசிக்க வச்ச அவரோட இந்தக் கேள்விக்காக, ஒரு பாராட்டு.

பொதுவா இந்த வலைப்பதிவர் மாநாடு பார்த்தா, போண்டா,டீ, பரோட்டா பரிமாறல் பத்தின விசயங்களா இருக்கும்னுட்டு நினைச்சுகிட்டே, இதயும் படிச்சேன். ஆனா, தருமி அய்யா சூப்பரா எல்லா வலைப்பதிவர்களும் யோசிக்கற மாதிரி இந்தக் கேள்விய வச்சிருக்காரு.


'பேனா முனை வாள்முனையை விடக் கூர்மையானது'ன்னு சொன்னது அந்தக் காலம். இப்ப 'வலைமுனை வாள்முனையைவிடக் கூர்மையானது'ன்னு சொல்லலாம்.

கண்டிப்பா இந்த பதிவுகளால மிகமிக நல்ல காரியங்கள் செய்யலாம், செய்ய முடியும்ங்கறது என் எண்ணம்.

பத்திரிக்கைகளும், மற்ற சில அரசியல்வாதிங்களும் இருட்டடிப்புச் செய்கிற விசயங்களைக் கூட வலையில் பதிப்பித்து உண்மை அலச முடியும். ஆனா, என்ன அதுக்கு நமக்கு கொஞ்சம் தைரியம் வேணும். பத்திரிக்கை, மற்ற பிற பலமான சக்திகளையே மிரட்டுகிற ஆட்கள் நம்ம அரசியல்வாதிகள். நாமெங்க இதில..ன்னுட்டு பயப்படுகிற வலைஞர்கள்தான் அதிகமிருக்கிறதால, அந்த அளவிற்கு இதில சாதிக்க முடியுமான்னு தெரியல.

ஆனா, வரக்கூடிய இளைய சமுதாயம் கண்டிப்பாக இதை மாற்றும்ஙகிற எண்ணம் எனக்கு இருக்கு.


தருமி அய்யா உட்பட, இனியும் கூட்ட இருக்கின்ற, கூட்டுகின்ற வலைஞர் மாநாடு அமைப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அந்தந்த வட்டம்/மாவட்டங்களில் உங்கள் எம்.எல்.ஏ / எம்.பி க்கள் தொகுதிக்குச் செய்கின்ற / செய்த நல்ல காரியங்கள் அல்லது கிடப்பில் போட்ட - காற்றில் பரக்கவிட்ட வாக்குறுதிகளைச் சொல்லவும் ஒரு தளமாகவும் இந்த ப்ளாக்குகளைச் செய்யச் சொல்லுங்கள்.

நல்ல காரியங்கள் செய்கின்ற எம்.பி/எம்.எல்.ஏ க்களுக்கு அது உற்சாகமாய் இருக்கட்டும். செய்யாதவர்களை செய்யத் தூண்டும் விதமாக இருக்கட்டும்.

கூட்டப் படுகின்ற வலைஞர் கூட்டங்கள், இந்த நற்சிந்தனையையும் வலைஞரிடையே வைக்குமானால், அதுவும் இந்த ப்ளாக்குலகம் இந்தச் சமுதாயத்திற்கு செய்கின்ற ஒரு நன்மையே..

2 comments:

தருமி said...

இந்தப் பதிவை லின்க் கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ?

இப்பதிவுக்கும், சொன்ன கருத்துக்களுக்கும் நன்றி

BadNewsIndia said...

சோத்துக்கட்சி, நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்!