31 October 2006

கலர்ப்படம் காட்டுறாங்கப்பா..

நடந்து முடிந்தது ஒரு உள்ளாட்சித் தேர்தல்.

ஆரம்பத்திலேயே, அதிரடி கலவர ஆக்சன்ல தொடங்கின படம், அப்புறம் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செஞ்சுட்டார்னு ஒரு 'ட்விஸ்ட்' ஏற்படுத்தி திமுக - பாமக உற்சாகப் பட்டு கிடக்க, 'குடிகாரன் -லாம் எம்ஜிஆர் பத்தி பேசுவதான்னு' கேக்க, 'ஊத்திக் கொடுத்தாரா'ன்னு பதிலடி கொடுக்க ஓரே உற்சாகமா போய்கிட்டு இருக்க, திடுதிப்-னுட்டு சொந்த கேங்-லேயே 'பச்சைத் துரோகம்னுட்டு' எதிர்பாராத டர்னிங்க்-ல வந்து இண்டர்வெல் உட்டுருக்காங்க. இனி எப்படி போகுமோ? த்ரில் தாங்க.

எதிர்பாராம வந்த தடங்கல எப்படியும் ஹீரோ சமாளிச்சுருவாருன்னுதான் தோணுது. அடுத்து பஸ்கட்டண உயர்வு..மின் கட்டண உயர்வு அந்த உயர்வு..இந்த உயர்வுன்னுட்டெல்லாம் மக்களுக்கு ரெடி பண்ணனுமே..


பதவி தாரேன்னு வாக்குறுதி கொடுத்திட்டு தரலே. ஜெயிக்க வைக்கிறேன்னுட்டு, தோற்க வச்சுட்டாங்க, பச்சைத் துரோகம் அது இதுன்னு எல்லாம் பேசறாங்களே, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்தாம, ஏமாத்தறத என்ன கலர் துரோகம்னுங்க சொல்றது?

ம்..ம்..இதெல்லாம் எங்க யோசிக்க? யாரு யோசிக்க. அடுத்து இவரு அங்க போவாரா? இல்ல அவரு ஏதாவது கொடுத்து இவர சமாளிப்பாரா? இதப் பத்தி பேசி, ரெண்டு டீ-யக் குடிச்சிட்டு இடத்தக் காலி பண்ணுவோம்.

சண்டைப் படம்னா மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். வலைப்பதிவு எழுதறது நமக்கும் அவல் கிடைக்குது. கொரிச்சுட்டு விறுவிறுப்பா படம் பாக்க வேண்டியதுதான். ம்ம்...



மக்களுக்கு ஜாலிதான். இன்னும் கொஞ்சம் நாளைக்கி பேப்பர்காரனுங்களுக்கும் ஜாலிதான். பார்க்கலாம், இடைவேளைக்கு அப்புறம் எப்படி போகுதுன்னு..

5 comments:

oosi said...

நல்லா கேட்டீங்க ....

Anonymous said...

//இதப் பத்தி பேசி, ரெண்டு டீ-யக் குடிச்சிட்டு இடத்தக் காலி பண்ணுவோம்.//

- :))

VSK said...

சொன்னாலும் ஒரு சொல்லு,

பளார்னு மொகத்துல அறையற மாதிரி ஒரு பதிவு!

திருந்தற சனமா இது!

ஊதற சங்கை ஊதுங்க!

விடியற போது விடிஞ்சு தொலைக்கட்டும்!

BadNewsIndia said...

ஜாலியா? ஒவ்வொரு கம்னாட்டிக்கும் வருஷத்துக்கு 1 கோடி அப்பு.
சும்மா கலர் படம் அவங்களும் வேடிக்க பாத்துட்டு நின்னா, நாமந்தேன்.

ஊர்ல ரோடு போடணும், சாக்கடைய சரி பண்ணனும், கொசுவ ஒழிக்கணும் - இவ்ளொ கண்ராவி பண்ண வேண்டியிருக்கே.

ஹ்ம். பொது நல அக்கரை இல்லாதவன் எல்லாம் பொது வாழ்க்கைக்கு வரது தான் பிரச்சனையே.

சோத்துக்கட்சி said...

ஊசி, அருண்குமார், எஸ்கே, பேட்நியூஸ்இந்தியா உங்கள் வருகைக்கு நன்றி.

எஸ் கே அய்யா சொல்லுற மாதிரி ஊதற சங்க ஊதுவோம், கேக்கிற காதுமட்டும் கேக்கட்டும்..