02 November 2006

சூப்பர் பல்ட்டியா? குட்டி கரணமா?

இன்னைக்கிச் செய்தியெல்லாம் படிச்சிருப்பீங்க. பச்சைத் துரோகம்லாம் வெளுத்துப் போச்சு போல.

'சேம் சைடு கோல் போட்டதெல்லாம் மறந்துடுங்க. மீண்டும் கிளர வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டாங்க'

'என்னாத்துக்கு வெளிய போய் சத்தம் போட்டுகிட்டு. உள்ளார வந்து பேசி செட் பண்ணிக்கலாம். எதுக்கு எல்லா குட்டையும் வெளிய விடணும்னு' டீல் போட்டுருப்பாக. தமிழ் வழி தூது விட்டாச்சு.

ஒரு நாள்ல எல்லாக் கோபமும், துரோகமும் மறையுதுன்னா இரண்டு தலைவர்களுக்கும் பெரிய மனசுதாங்க.

ரொம்ப ஆர்வமா அடுத்த சீனைப் பார்க்கலாம்னா, 'சப்'னு ஆக்கிட்டாங்களே. கலைஞரே இப்படி பணிஞ்சு போனார்னா, பின்னாடி எப்படி இருக்குமோ?

அப்புறம் குறுநில மன்னர்கள் போல,சாதிக்கொரு கட்சி ஆரம்பிச்சு நிறைய தலவருங்க வரப்போறாருங்க.

ம்..ம்.. .இது சூப்பர் பல்ட்டியா? இல்ல குட்டி கரணமா? தெரியல. டீல் ஒத்து வரலைன்னா, வெளுத்தச் சாயத்துக்கு கலர் கொடுக்க வேண்டியதுதான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :)

4 comments:

தீரன் said...

உண்மை தமிழர்களுக்குள் சண்டை மூட்டி குளிர் காண நினைப்பவர்களின் கனவு தகர்க்கப்பட்டது நினைத்து வருத்தமா ?

சோத்துக்கட்சி said...

நன்றி தமிழ்ச்செய்தியாரே!

சோத்துக்கட்சி said...

உண்மைத்தமிழர்களுக்குள் சண்டை மூட்டினார்களா? யாருங்க மூட்டினது? அவரா துரோகம்னாரு. இவரு கூட்டி வச்சி பேசினாரு. இதுக்கு இடையில வேற எந்த 'போலி'த் தமிழனும் இருந்தாங்களா என்ன?

இன்னக்கி அடிச்சிப்பாங்க..நாளைக்கிச் சேருவாங்க. அதுல நமக்கு என்னாங்க வருத்தம். அசல் தமிழன் - போலித்தமிழன்னு தமிழனையே பிரிச்சி பேச வைக்கிறாங்க பாருங்க, அதுலதாங்க வருத்தம்.

Anonymous said...

சரியாச் சொன்னீங்க சார்.

//அசல் தமிழன் - போலித்தமிழன்னு தமிழனையே பிரிச்சி பேச வைக்கிறாங்க பாருங்க, அதுலதாங்க வருத்தம்.
//

'பதவி தரலேன்னு சண்டை போடறவங்க, மக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கலன்னு சண்டை போட்டா பாராட்டலாம்.