03 November 2006

முதல்ல மனுசங்களா இருங்கப்பா

இன்னைக்கு வலையில செய்திகளை படிச்சுகிட்டு இருந்தப்ப, 'தமிழ்செய்தி'யின் வலைப்பதிவு கண்ணில் பட்டது.

Image and video hosting by TinyPic
தலித்துகள் கோவிலில் நுழைய அனுமதி மறுத்திருக்கிறார்கள். ஒரிசாவிலுள்ள கேந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலில்தான் இந்த அட்டூழியம். இது இன்னைக்கி நேத்தைக்கிலிருந்து அல்ல, கடந்த 400 வருடங்களாக இப்படி இருக்கிறதாம்.

கடந்த வருடம், நாலு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக அவமதிக்கப் பட்டதோடு, அபராதம் வேறு வசூலிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரம் வாங்கியும் கூட இந்த நிலை மாறவில்லையென்றால், கேவலம்.

தலித்துகள் கோவிலில் சாமி பார்க்கணும்னா, வெளிப்பிரகாரத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் பார்க்கணுமாம்.

மனுசன மனுசனா பாருங்கப்பா. எந்தக் கடவுளும் இவந்தான் என்னப் பார்க்கலாம்..அவன் என்னப் பார்க்கக் கூடாதுன்னு சட்டம் போடலை.

இந்த மாதிரி மக்களுக்கு புத்தியில படணும்னுதான் நந்தனார் கதை கூட சொல்லப்பட்டது. வேட்டுவன் குகனுடன், புனித ராமரின் நட்பு பாராட்டப் பட்டது.

ஆதிக்க வெறியர்கள், கடவுளின் மேல பழியைப் போட்டு, அடக்கி ஆள நினைத்ததன் விளைவுதான் இந்தமாதிரியான பழக்கமெல்லாம்.

மனுசனுக்காகத்தான் கடவுள். கடவுளுக்காக மனுசன் இல்லை. இத எப்பதான் மடமைக்கூட்டம் உணரப் போகுதோ?

ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க. 'தலித்துகளின் தலைவர்கள்' என குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் பிதாமகர்களுக்கு, இதெல்லாம் கண்ணில் பட வில்லையா? தலித்துகளுக்கென ஒரு தனி மந்திரி வேறு. சுதந்திரம் அடைஞ்சதிலேயிருந்து எத்தனை கட்சிகள் ஆண்டு போயிருக்கும். தலித்துகளுக்காக எத்தனை மந்திரிகள் வந்து போயிருப்பாக. எந்த ஒரு அரசியல்வாதி கண்ணுக்கும் இந்த அவலம் படலையா? இல்லை, பட்டும் காணாம விட்டுட்டாங்களா? இல்லை அதிகார வர்க்கத்துக்கு விலை போயிட்டாங்களா?

மொத்த மக்கள் தொகையில் 50 சதத்திற்கு இணையாக இருக்கக் கூடிய கேரடா கார்-க் கில நவம்பர் 19-ஆம் தேதி, தலித்துகள் அத்து மீறி கோயிலுக்குள் நுழையப் போறாங்க. அதுக்குள்ள, அதிகாரிகள் தலையிட்டு, சரியான முடிவு எடுக்கலைன்னா, நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம்.

இப்பதான் மாநில அரசு முழிச்சிகிட்டு, 'விரைவில் தீர்வு காண்போம்னு', மாநில தலித்து மந்திரி மூலமாச் சொல்லியிருக்கு.

ம்..ம்.. 'மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே..இது மாறுவதப்போ தீருவதப்போ நம்ம கவல'..

2 comments:

மணியன் said...

என்ன கொடுமை இது? வைக்கத்தில் இருந்த எழுச்சி குறையக் காரணமென்ன ? சட்டங்கள் இயற்றியாயிற்று, இடஒதுக்கீடுகள் ஏற்படுத்தியாகிவிட்டது, இனி அவர்கள் பாடு என்று சமூகம் அவர்களை மறந்துவிட்டதோ ?

Jay said...

என்ன இது மனுஷங்கள மனுஷங்களே இப்பிடி!!!