29 October 2006

மக்களே தலையில் பூசிக்கொள்ள சந்தனம்..இலவசம்

என்னாது..தலையில பூசிக்க சந்தனமா? எங்க குடுக்கறா? யாரு குடுக்கறா? ஆர்வமா இருக்கா?

வேற யாரு குடுப்பா? எல்லாம் நம்ம அரசியல்வாதிங்கதான் நம்ம தலைக்கு மொளகாய் அரைக்கிறதுக்கு பதிலா சந்தனம் தேய்க்கிறாங்க. மொளகா அரச்சா எரியும், சந்தனம் பூசினா குளிர்ச்சியா இருக்கும்ல.

என்னா, ஏதுன்னு புரியணும்னா
இங்க போய் படிங்க

தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்


அரசாங்கம் ஒதுக்கிற நிதி எவ்வளவு, அத எப்படி செலவு பண்றாங்கன்னெல்லாம் யோசிங்கய்யா?

நம்ம மக்கள்-ல, பெரும்பாலானவங்களுக்கு அவங்க அவங்க பொளப்ப பாக்கவே நேரம் பத்தாது. இதுல போயி, இத எங்க பார்த்து எவனப் போயி கேள்வி கேக்கப் போறான்?

படிச்சவங்க, நாலு எழுத்து அறிஞ்சவங்க, சமூக மனப்பான்மை உள்ளவங்க எல்லாம், கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதுமாதிரியான விசயங்கள கேள்வி கேட்கத் தொடங்கனும், அலசி ஆராயணும். நம்மாள தனிக்கட்சி ஆரம்பிச்சி, முழு நேரமும் செலவிட முடியாதுதான். ஆனா, கொஞ்சம் சமூகப் பொறுப்போடு, நடந்து இம்மாதிரியான விசயங்களைத் தட்டிக் கேட்க முன்வந்தா, மக்களுக்கான குறைந்த பட்சம் அடிப்படை வசதிகளாவது பெருகாதா?

திட்டித் திட்டித்தான் நம்ம அரசியல்வாதிங்க பொளப்பு நடத்தறானுங்க. இவன் அவனத் திட்டறான். அவன் இவனத் திட்டறான். காணாக் குறைக்கு, மக்களுக்குள்ளே வேற, அவன் உசந்த சாதிக்காரன், இவன் தாழ்ந்த சாதிக்காரன், அவன் அந்த மதம், இவன் இந்த மதம்னு வேற பிரிச்சு உட்றானுங்க. எவனாவது முழுச்சி கேள்வி கேட்டான்னா, அவன் அந்த சாதிக்காரன் இல்ல, அந்த மதம்னு அதனாலதான் அப்படி பேசறான்னு சொல்லிட வேண்டியது. பிரிச்சு, திசை திருப்பறதுக்கு ஆயிரம் விசயம் இருக்கு நம்ம கிட்ட. அத நம்பி அரசியல்வாதி பொழக்கிறான், ஜனங்க நாம பொழம்புறோம்.

ஏதோ உங்களால முடிஞ்சதச் செய்யுங்கய்யா, உங்க வம்சத்துக்கும் புண்ணியமாப் போகும்.





6 comments:

ச.சங்கர் said...

:))

Anonymous said...

dravida, soodra mudalvarai
thituum ummai vanmaiyaga kanddikkirom.
avarukku enna sothu irukku?
suntv is not his own , it is owned by kalanidhi.
arivalayam owned by katchi.
dinakaran , kumkumam, tamil murasu ellam dayanidhi sotthu.
madurai --ilavarasarukku
so stop your nonsense.
you are pachai parpaan
stop blaming our CM who is taken birth only for the improvement of TN and poor
anbu
Mayil

Hariharan # 03985177737685368452 said...

அட,

நம்ம பதிவு பெரும்பான்மை மக்கள் கட்சியான சோத்துக்கட்சியின் கவனத்தில் மீண்டும் வாசிக்கப்பட இப்பதிவில் இணைப்பாக வந்திருக்கிறது!

நம்ம மக்கள்ஸ் எல்லாம் இனி நல்லா கேள்வி கேளுங்கப்பா!

சோத்துக்கட்சி said...

விசித்திரகுப்தரே..

வருகைக்கு நன்றி. நல்லா கணக்கு பண்ணி, கேள்வி கேளுமய்யா!!

சோத்துக்கட்சி said...

Anony..

காய்ச்ச மரத்துல கல்லடிப்போம்கிறீங்க.

இது எல்லாக் கட்சியிக்கும் பொருந்தும். அதனால, எல்லோரையும் கேள்வி கேட்போம்.

சோத்துக்கட்சி said...

ஆமாம் ஹரி.

எல்லாம் நீங்க சொன்ன நல்ல தகவலின் உந்துதல் தான்.

நிறைய சமூகத்துக்கு நல்லது பத்தி எழுதுங்க.